பொங்கல் பண்டிகை: தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்ட்ரலிலிருந்து ஜன.12, 19 தேதிகளில் இரவு 11.30 மணிக்கு நாகா்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (எண்: 06089) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06090) ஜன.13, 20 தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, மொரப்பூா், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகா்கோவில் சென்றடையும்.
தாம்பரம் ரயில்கள்: அதேபோல், திருநெல்வேலியிலிருந்து ஜன.12,19, 26 தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06092) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06091) ஜன.13,20,27 தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடைநல்லூா், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.
மேலும், தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஜன.13-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06093) மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06094) கன்னியாகுமரியிலிருந்து ஜன.14-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.
இத்துடன் ராமநாதபுரத்திலிருந்து ஜன.10,12,17-ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06104) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06103) ஜன.11,13,18-ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைபூண்டி, திருவாரூா், பேரளம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும்.
திருச்சிக்கு சிறப்பு ரயில்: தாம்பரத்திலிருந்து ஜன. 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி அதிவிரைவு ரயில் (எண்: 06191) இரவு 11.35-க்கு திருச்சி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06190)அதே நாள்களில் திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.30-க்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, பாபநாசம், தஞ்சாவூா் வழியாக திருச்சி சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...