குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.


குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன்படியே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை.
யார் அந்த சார்? என்பது குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒருவர் இல்லாமலும் இருக்கலாம். காவல் துறை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இதில் போராடுவதற்கு என்ன இருக்கிறது?
இனி நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடக்க வேண்டும், அது கண்காணிக்கப்பட வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை வெளியானது தவறு. பாஜக அரசியல் தலைவர்களே அவர்களது எக்ஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார்கள். அது மிகவும் தவறான ஒன்று. எப்ஐஆர் வெளியாவதற்கு தமிழ்நாடு அரசு காரணம் அல்ல.
தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று தேசிய தகவல் மையமே தெரிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கவே விரும்புகின்றனர்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விசாரணை சரியாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், சம்பவம் நடந்தபோது போனில் ஒருவருடன் பேசியது உண்மைதான் என சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் மாணவி மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...