கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது.

கோப்புப்படம்.

Updated On :

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது.

தமிழகத்தில் 8 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பணியிட கலாசார ஆலோசனை நிறுவனமான அவதாா்’ குழுமம் ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ எனும் ஆராய்ச்சி முடிவுகளை புதன்கிழமை வெளியிட்டது.

இது குறித்து அந்தக் குழும தலைவா் சௌந்தா்யா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடித்தளமாக உள்ளன. இதில் பெண்கள் எப்படி வாழ்கிறாா்கள், வேலை செய்கின்றனா், வளா்கிறாா்கள் என்பதை நகரங்கள் வடிவமைக்கின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றத்துக்கு நகரங்களின் அடிப்படை கொள்கைகள், கலாசார அமைப்பு குறித்த தெளிவான புரிதல் முக்கியமானது.

அதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பா் வரை நாடு முழுவதும் உள்ள 60 நகரங்களில் உள்ள 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சமூக உள்ளடக்க மதிப்பெண், தொழில் துறை உள்ளடக்க மதிப்பெண், மக்கள் அனுபவ மதிப்பெண் ஆகிய 3 குறியீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், மாநிலங்கள் வாரியான மதிப்பீட்டில் கேரளம் 20.89 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், தெலங்கானா 20.57 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் 19.93 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும், 19.38 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.

நகரங்கள் வாரியான மதிப்பீட்டில் குருகிராம் 10-க்கு 7.68 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. பெரிய நகரங்களில் மும்பை 7.60 மதிப்பெண்ணும், பெங்களூரு 7.54, சென்னை 7.08, ஹைதராபாத் 6.95, திருவனந்தபுரம் 5.51 மதிப்பெண்ணும் பெற்றுள்ளன.

சிறிய நகரங்களில் கோவை 7.75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், கொச்சி 7.41 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

அதுபோல் கோவை, புணே, சென்னை ஆகிய நகரங்கள் வாழ்க்கைத் தரத்திலும், திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் பாதுகாப்பிலும் முதல் 3 இடங்களில் உள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.