தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்: விஜய் பங்கேற்கவில்லை
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை...


தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.
எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காகக்கொண்டு தவெக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தவெக மாவட்ட செயலா்களுடன் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளா்களை நியமிப்பது குறித்து வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசிப் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சென்றதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு விஜய் ஒப்புதல் அளித்தவுடன், விரைவில் மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...