திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால்...! - விஜய் பேச்சு

சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேச்சு...

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:03 pm IST

நாங்கள் எந்த கட்சியை ஒழிக்கவோ அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை என்றும் மக்களுக்கு நல்லது செய்யவே வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில்,

ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.

ஆனால், இளம் தலைமுயினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் மாற வேண்டும்.

பணம் கொடுத்தால் நீங்கள் ஓட்டு போட்டு விடுவீர்களா? நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

'எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது; எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குதான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்'

இனி நீங்கள் கொள்ளையடித்த பணம் எல்லாம் குப்பையில்தான் போட வேண்டும். மக்களும் ஊழல் ஆட்சியை குப்பையில் போட போகிறார்கள்.

இளம் தலைமுறையினர் தங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள்.

நாங்கள் எந்த கட்சியை ஒழிக்கவோ அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ இல்லை, வெறுப்பு அரசியல் செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிரி யார் என்று அறிவித்து மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கேட்கிறார்களே... அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தாண்டி வேறு எதுவும் அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா?

அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்யும் இவர்களுக்கு எல்லாம் ஒரு சவால்...

இவர்களால் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க திராணி இருக்கிறதா?

எங்களுக்கு அனுபவம் இல்லைதான், கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான்" என்று பேசினார்.

Summary

TVK Leader vijay's speech in salem meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.