
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்!