
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே தடம்புரண்டது.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வரை தினமும் செல்லும் பயணிகள்ரயில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் 6 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
எட்டு பெட்டிகளை கொண்ட இந்த மின்சார ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்து இடதுபுறமாக புதுச்சேரி மார்க்க ரயில் பாதையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக ஆறாவது ரயில் பெட்டியின்சக்கரம் ரயில் பாதையிலிருந்து இறங்கி தடம் புரண்டது. லோகோ பைலட் அதைக் கவனித்து விரைவாக ரயிலை நிறுத்தியதால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மெதுவாக ரயில் சென்றதால் ரயில் பெட்டி தடம் இறங்கியதன் சப்தம் கேட்டதால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் ஆறாவது பெட்டி மற்றும் இடதுபுற சக்கரம் தடம் புரண்டு இறங்கியது. சுமார் 3 மணி நேரப் போராடத்துக்குப் பின்னர் சீரமைக்கப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
பெட்டி சாயவோ விபத்து ஏதும் ஏற்படவில்லை அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தடம் புரண்ட ரயிலை ரயில் பாதையிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணை முடிந்த பின்னரே தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் என்றும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் தடம் புரண்டதால் விழுப்புரம் பாதையில் காலை 8.30 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விழுப்புரம்-புதுச்சேரி மெமு என்பது சுமார் 38 கி.மீ. தூரம் மட்டுமே செல்லும் குறுகிய தூர ரயிலாகும்.
தண்டவாளத்தில் ரயில் சக்கரங்கள் இறக்கிய விவகாரத்தில் தொழில்நுட்பக் கோளாறா அல்லது நாசவேலையா என விழுப்புரம் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.