
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில், 930 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன.
மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை பாலமேட்டில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாகத் தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடக்கி வைத்தனர்.
காலை முதல் 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி, தற்போது நிறைவடைந்துள்ளது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் காத்திருந்து அடக்க முயன்ரனர்.
முதல் பரிசு
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி, 12 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 11 காளைகளை அடக்கி பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேபோன்று சிறந்த காளையாக விஜய் தங்கபாண்டிக்குச் சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
52 பேர் காயம்
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்தியதாகவும், எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால் 42 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.