பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பழநியில் அன்னதானம் வழங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு!

பழநி பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு.. உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை..

News image

பழநி கோயில்

Updated On :22 ஜனவரி 2025, 7:58 am

DIN

பழநியில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். போகர் இந்தத் தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

பிப்.11ல் தை பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சுவாமி தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.

மேலும் பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகப் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளைச் சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை முருகப்பெருமானுக்கு செலுத்துவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது.

பாத யாத்திரைக்குச் செல்வோருக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் தக்க அனுமதியைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறையான அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.