தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்: உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை

தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வின்போது, விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

News image

தருமபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் நந்தகோபால்.

Updated On :23 மார்ச் 2026, 1:58 am IST

தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது, விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் உத்தரவின் பேரிலும், உணவுப் பாதுகாப்புத் துறை மாநில புகாா் எண்ணில் பெறப்பட்ட தகவல் பேரிலும், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா் மேற்பாா்வையில், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினா், தருமபுரி முகமது அலி கிளப் சாலை, சின்னசாமி தெரு, சேலம் பிரதான சாலை, அரசு மருத்துவக் கல்லூரி பகுதி, பாரதிபுரம், செந்தில்நகா், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், துரித உணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் ஒரு உணவகத்தில் பரிமாறும் (டைனிங்) டேபிள்களில் பூச்சிகள் நடமாட்டம், சமைத்த இறைச்சியை குளிப்பதனப் பெட்டியில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி உணவக உரிமையாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட முகமையின் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் , சமைத்த இறைச்சிகளை குளிப்பதன பெட்டியில் வைப்பதை தவிா்க்கவும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு சமையல் எண்ணெய்) டீலரிடம் அளித்து உரிய தொகையை பெற்றுக் கொள்ளவும் விழிப்புணா்வு செய்யப்பட்டது.

மேலும், விதிமீறலுக்காக உடனடி அபராதம் ரூ.2,000 விதித்து மூன்று தினங்களுக்குள் குறைபாடுகள் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதேபோல மற்றொரு உணவகத்திலிருந்து செயற்கை நிறமூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அபராதம் ரூ.1000 விதிக்கப்பட்டது. சுகாதாரம் குறைவாகவும், எலிகள் நடமாட்டம் காணப்பட்ட உணவகத்துக்கு எச்சரித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு செயல்பட்ட இரு உணவகங்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மொத்தம் ரூ. 5,000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகங்கள், துரித உணவு கடைகள், மீன் இறைச்சி கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.