தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரபாகர் எச்சரித்துள்ளார்.
தற்போது வெய்யில் அதிகரித்து வரும் சுழுலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாகம் தீர்க்கவும், விருந்து உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் குடிநீர் கேன் விற்பனை, அத்தியாவசியமான தேவையில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தினமணி செய்தியாளருடன் பேசிய திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரபாகர் தெரிவித்ததாவது:
"கேன் குடிநீர் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகிய விபரங்கள் இடம்பெறுவது அவசியம். தரம் இல்லாத கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு பாதுகாப்புத் துறை உரிமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் குடிநீர் கேனில் இடம்பெறுவது அவசியம். அதேபோல் கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது பல முறை புகார்கள் தொடர்ந்து வரும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
கோடை வெய்யில் வாட்டி வதைக்கும் நிலையில் கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு தொடங்கி உள்ளதால், புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், திருப்பத்தூர் மாட்டத்தில் குறைகள் குறித்து புகார்கள் அளிக்க 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணைத் தொடர்புகொள்ளலாம். புகார்தாரர் குறித்த தகவல்கள் பாதுக்காக்கப்படும் என்றார்.
Summary
Fine of ₹5,000 for selling substandard canned drinking water
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்

தருமபுரியில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




