கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இபிஎஸ் சுற்றுப்பயணம்: அறிவித்த சில நிமிடங்களில் ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பதாக மறுஅறிவிப்பு...

News image

எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்.

Updated On :23 ஜனவரி 2025, 9:34 am

DIN

தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் நான்குமுனைப் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கோவை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி, அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை எடப்பாடி பழனிசாமி கேட்டறியவுள்ளதாக இன்று அறிவித்தார்.

மேலும், ஜனவரி 31 ஆம் தேதி கோவையிலிருந்து இந்தப் பயணம் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அதே மேடையில் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் 10 நாள்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும், பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.