
சென்னை: உணவு, மருந்து, காய்கறி உள்ளிட்டப் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு விநியோகம் செய்யும் டெலிவரி நிறுவன ஆள்களைக் கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
டெலிவரி நிறுவன ஆள்களைப் போல சென்று வீடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், டெலிவரி நிறுவன ஆள்களை கண்காணிக்க புதிய விதிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், சென்னையில் முக்கிய நபர் ஒருவர், டெலிவரி நிறுவன ஊழியர் போல சென்ற நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, டெலிவரி நிறுவன சீருடை அணிந்திருந்தாலும், அவர்களுக்கென எந்த அடையாள அட்டையும் இல்லாததால், பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிமன்றம், விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், டிஜிபி பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக காவல்துறை டிஜிபி 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்சோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.