வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பின் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து முழுதாக இரண்டு ஆண்டுகள் முடிந்தபோதும் கூட, இதுவரை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் பல முறை மனு தாக்கல் செய்து அவகாசமும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.