வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: விசிக, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: விசிக, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வேங்கைவயல் வழக்கில் பாதிக்கப்பட்டவா்களையே குற்றவாளிகளாகக் காட்டுவது சரியல்ல என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
Published on

வேங்கைவயல் வழக்கில் பாதிக்கப்பட்டவா்களையே குற்றவாளிகளாகக் காட்டுவது சரியல்ல என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

தொல்.திருமாவளவன்: வேங்கைவயல் வழக்கில் உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் முரளி ராஜா, சுதா்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று போ் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களாவா். பட்டியல் சமூகத்தினா் குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவு கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிா்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.

எனவே, இந்த குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். தமிழக அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): சம்பவம் நடந்து இரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற நிா்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என காவல்துறை கூறுவது சரியல்ல. உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்

X
Dinamani
www.dinamani.com