பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பல் இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பலை இயக்கி அதிகாரிகள் சோதனை..
பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பலை இயக்கி சோதனை
பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பலை இயக்கி சோதனை
Published on
Updated on
1 min read

பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கடலோர காவல் படையின் கப்பலை இயக்கி ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டதால் புதிய பாலம் கட்டுவது அவசியமானது. இத்திட்டத்துக்காக 2019-இல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2020 மே மாதம் பிரதமா் நரேந்திர மோடி பாலத்துக்கான அடிக்கல் நாட்டினாா்.

2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டாலும் கரோனா பாதிப்பு, பேரிடா் போன்ற காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே பழைய பாம்பன் பாலத்தின் தாங்கும் திறன் பாதிக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி 2022 டிசம்பா் முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த செப்.30-இல் முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்திய பிறகு புதிய பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், பாம்பன் பாலத்தை திறக்காமல் ரயில்வே அதிகாரிகள் தாமதித்து வரும் நிலையில், ராமேசுவரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாம்பன் புதிய பாலத்தை செங்குத்தாக தூக்கி கடற்படையின் கப்பலை இயக்கி ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

முன்னதாக, பராமரிப்பு பணிக்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலம் வழியாக காலி பெட்டிகளுடன் இன்று காலை ராமேசுவரம் ரயில் நிலையம் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com