அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அஜித்குமாரை தாக்கும் காவலர்கள் / டிஜிபி சங்கர் ஜிவால்
அஜித்குமாரை தாக்கும் காவலர்கள் / டிஜிபி சங்கர் ஜிவால்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜத்குமார், காவல் துறையினரின் விசாரணையில் உயிரிழந்தார்.

ஆனால், அவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விசாரணையின்போது காவல் துறையினர் அஜித் குமாரை தாக்கும் விடியோ வெளியான நிலையில், இச்சம்பவத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உடனடியாக விசாரணை நடத்தி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தனிப்படைகள் கலைப்பு

பொதுவாகவே அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் தனிப்படைகள் இருப்பது வழக்கமானது.

இந்நிநிலையில் அஜித்குமார் லாக்கப் மரணத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்புப் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ஏனெனில், கோயிலில் காவலாளியாக பணியில் இருந்த அஜித்குமாரை சீருடை அணியாத தனிப்படை காவல் துறையினரே விசாரணை எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பொழுது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும், தனிப்படைகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தக் கூடாது எனவும் ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Summary

Tamil Nadu DGP Shankar Jiwal has ordered the disbandment of unauthorized special forces in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com