கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!

கந்து வட்டி கொடுமையால் தவெக உறுப்பினர் தற்கொலை; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை
கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தவெக உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு பகுதியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த விக்ரமன் (34) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

குடும்பச் சூழ்நிலையின் காரணமாக சிலரிடம் கடனும் வாங்கியிருந்த விக்ரமனுக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், புதன்கிழமையில் (ஜூலை 2) வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியவர், தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வெளியில் சென்றிருந்த அவரது மனைவி, விக்ரமன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விக்ரமனின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, விக்ரமனின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், கடிதங்கள் மூலம் தற்கொலைக்கான வாக்குமூலத்தையும் அவர் எழுதியிருந்தார். கடிதத்தில், ஒருவரிடம் வாங்கிய ரூ.3.80 லட்சம் கடனை, உடல்நலக் குறைவு காரணமாக திரும்பச் செலுத்துவதில் ஏற்பட்ட காரணமாக, தன்னையும் மனைவியையும் இழிவாகப் பேசுவதாகவும், வேறொருவரிடத்தில் கடன் வாங்குவதற்காக முன்பணம் செலுத்திய நிலையில், அந்தப் பணத்தை அவர் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அவர் தவெக தலைவர் விஜய்யை குறிப்பிட்டு கூறுகையில், எனக்கு நடந்ததுபோல 10, 15 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்து, சித்ரவதை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இனி வரும் ஆட்சியில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அச்சப்பட வேண்டும். மேலும், தயவுசெய்து என் மனைவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உதவி செய்யுங்கள். எனது உடல் உறுப்புகளை எடுத்துக் கொண்டு, எனது குடும்பத்துக்கு பண உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இதையும் படிக்க: மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

Summary

PY TVK member committed suicide due to the cruelty of usury

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com