ஆம்ஸ்ட்ராங் சிலைக்கு தமிழக அரசு அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் சிலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திடுப்பது பற்றி...
BSP Armstrong
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் சிலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இதுவரை ரௌடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு என 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி ஜூலை 5 ஆம் தேதி, அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் திருவுருவச் சிலை திறக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

இதையடுத்து, சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், பொற்கொடி தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டது.

Summary

Tamil Nadu government has given permission for the statue of Bahujan Samaj Party state president Armstrong.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com