மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணை வரலாற்றில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவு 120 அடியை கடந்த 29 ஆம் தேதி எட்டியது. அதன் பிறகு நான்கு நாள்களாக நீர் மட்டம் 120 அடி நீடித்து வந்தது. அதன் பிறகு கடந்த 3 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் நீர் மட்டம் 119 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் 120 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 92 ஆண்டு கால வரலாற்றில் 45 வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 53,205 கன அடியிலிருந்து 53,027 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
summary
The Mettur Dam in Tamil Nadu, India, reached its full capacity of 120 feet for the second time in a row due to increased water inflow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

