
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
உள்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் பொறுப்பாளா்களை நியமிப்பதும், நீக்குவதுமாக உள்ளது கட்சியினர் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாகக்குழு பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ. அருள், ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
PMK founder Ramadoss has removed Anbumani from the executive committee of the pattali makkal party.
இதையும் படிக்க: டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.