முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

1,01,973 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது தொடர்பாக தமிழக அரசு.
தமிழக அரசு
தமிழக அரசுfile photo
Published on
Updated on
1 min read

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் முன்னேற்றம், திட்டமிடப்பட்ட இலக்கினை அடைவதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை உரிய காலத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆவன செய்வதே இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் முக்கியப் பணியாகும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவரது கடும் உழைப்பின் மூலம் சிறப்பான பல வெற்றிக் கனிகளைப் படைத்து வருகிறது.

குறுகிய காலப் பயிற்சி

கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

முன்கற்றல் அங்கீகாரம் (Recognition of Prior Learning)

முன்கற்றல் அங்கீகாரம் என்பது, அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை அங்கீகரித்தல் ஆகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல முகாம்களை நடத்தி கட்டுமானத் துறை, தளவாடம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(SME), தோல் மற்றும் நூல் தொழில் துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் 1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகார (RPL) சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

மாபெரும் வெற்றித் திட்டமான நான் முதல்வன் திட்டம்

கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் திட்டமே நான் முதல்வன் திட்டம். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளன்று, அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மாற்றியமைக்கக்கூடிய ஒரு மாபெரும் வெற்றித் திட்டமாக இளைஞர்களுக்குப் பயனளித்து வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர்

மொத்தமாக, இத்திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது..

நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம் செயல்பாடுகள்

கடந்த நான்கு ஆண்டுகளில், 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 2,60,682 மாணவர்களில் 63,949 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.

உயர்கல்வி படிப்பதற்குப் பாலம் அமைக்கும் உயர்வுக்குப்படி (பள்ளிகள்) 2023 மற்றும் 2024 “நான் முதல்வன் உயர்வுக்குப்படி ”திட்டம் 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வழிவகை செய்துள்ளது.

Summary

The Tamil Nadu government has reported that 1,01,973 students have received job opportunities through the camps.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com