
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக நாளை(ஜூலை 7) முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக நாளை முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டத்தை சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்கவுள்ளது.
முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனை பேணும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் அளிக்கலாம்.
இந்தத் திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளது.
இதையும் படிக்க: தக்காளி விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மக்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.