அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது: ஜி.கே. வாசன்

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
G.K. Vasan
ஜி.கே. வாசன்
Published on
Updated on
1 min read

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார் என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது.

முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கபட வேண்டும். காவல்துறையை கட்டுபடுத்த முடியாத அரசு உள்ளது. தமிழக அரசின் தவறுகளை, மக்கள் விரோத போக்கை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். வருகின்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் பாடம் புகட்டுவார்கள்.

மக்கள் மீது வரி செலுத்துவது அரசின் வழக்கமாகிவிட்டது‌‌. எதற்கெடுத்தாலும் வரி என்ற நிலை உள்ளது‌. எனவே ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர். அதிமுக - பாஜக - தமாக கூட்டணி மக்களின் நம்பிக்கை பெற்ற கூட்டணியாக உள்ளது. ஒத்த கருத்து உடையவர்கள் ஒருசேர பயணிக்க வேண்டும் என்பதை தமாகவின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுவாக முடிவு எடுப்பது. எடுத்த முடிவை மாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. 24 மணி நேரத்தில் பல முடிவுகள் பல கட்சிகள் அறிவித்திருப்பதை பல தேர்தலில் நாம் பார்த்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலம் இருக்கிறது என்றார்.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகள் கூடுதல் சீட்டு கேட்பது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, குழப்பம் இல்லாத கூட்டணிக்கு இதுவே சான்று என தெரிவித்தார்.

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

Summary

G.K. Vasan has said that there is an unsolvable knot in the Ajith Kumar issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com