
தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Government order issued allocating Rs. 7,500 crore for road works in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.