தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
mk stalin - dhoni
முதல்வர் ஸ்டாலின் - தோனி.
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனி அவர்களுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி இன்று தனது 44 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கேக் வெட்டி அவர் கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்த விடியோ இணையதளங்களில் வைராகி வருகிறது. தோனியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

Summary

CM Stalin congratulated former India cricket captain MS Dhoni on his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com