
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் பொறுப்பாளர்கள் கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி நடத்துகிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புமணி நடத்தும் கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலர் முரளிசங்கர், இணைப் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.
பாமகவில் நடைபெறும் இந்த இரு கூட்டங்களிலும் வரும் பேரவைத் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.