25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் மழை நிலவரம் பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜூலை 2025, 10:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்

வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

summary

IMD said that there is a possibility of rain in 14 districts including Chennai, for the next 3 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.