தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்ட நிதி அதிகரிப்பு

தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீா்வளத் துறை வெளியிட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்துக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீா்வளத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்துக்கான நிதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் உலக வங்கி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து, ரூ.2,962 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திட்டத்தை இடைக்காலமாக ஆய்வு செய்த உலக வங்கி, கூடுதல் நிதியை விடுவிக்கவும் திட்டத்தை அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக ரூ.3,249.12 கோடி மதிப்பிலான பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டம் தமிழ்நாட்டில் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com