திமுக ஆட்சியில் 3,347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 3347 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. காலை 5.25 மணி முதல் 6.10க்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுடன் சந்திப்பில்,
முருகனின் அறுபடை வீட்டிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ் வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பண்ணிசை திருமுறை இசைக்க ஓதுவார்களோடு பெண் ஓதுவார்கள் பங்கேற்ற சிறப்பான குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க ஏழு நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
இதனை 2,000 பேர் அமர்ந்து தரிசிக்கும் வசதி செய்யப்பட்டது. 25 ட்ரோன்கள் அவற்றுடன் புனித நீர் தெளிப்பான்கள், பொதுமக்கள் திருப்பரங்குன்றம் நகரின் அனைத்து பகுதிகளிலும் குடமுழுக்கைக் கண்டு களிக்கும் வகையில் பிரம்மாண்டமான எல்சிடி ஸ்கிரீன்கள், கழிப்பறை மற்றும் போதுமான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
உணவு வசதி மருத்துவ வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. வருகின்ற பக்தர்கள் பொறுமை காத்து தரிசனம் செய்ய வேண்டுகோள் விடுகிறேன். திருகுடமுழுக்கு நாளான இன்று முருகனை தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதேபலன் அடுத்த 48 நாள்கள் இங்கு வந்து தரிசனம் செய்தாலும் கிடைக்கும்.
திராவிட மாடல் ஆட்சியில் தான் இப்படிப்பட்ட குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் கடவுள் முருகனுக்கு அறம் சார்ந்த திருப்பணி தான் இறைப்பணி என்பதை எடுத்துக் கூறும் வகையில் இந்த ஆட்சி நடத்திக் காட்டி உள்ளது. இனத்தால் மதத்தால் மொழியால் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு அப்பாற்பட்டு அவரவர் வணங்கும் இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்யும் வகையிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையிலும் இந்த ஆட்சி இந்த குடம் முழுக்கை சிறப்புடன் நடந்து கொண்டுள்ளது.
48 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும் என்பதால் இந்த நாளில் எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்யலாம் எம்பெருமான் முருகப்பெருமானின் பூரண அருள் கிடைக்கும். திருப்பரங்குன்றம் குடமுழுக்கு பொருத்தவரை நாள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நானும் மதுரை அமைச்சர் மூர்த்தி, திமுக மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட முறை வருகை தந்து ஆய்வு செய்து பொதுமக்கள் மட்டுமின்றி அர்ச்சகர்களும் கூட மனமகிழ்ச்சி அடைகின்ற வகையில் இந்த குடம் முழுக்கைச் சிறப்புடன் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 3,347 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீட்டிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
Minister Sekarbabu has stated that 3347 temples have been consecrated since the DMK government took office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.