ஜூலை 28-ல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஆடிப்பூரத்தையொட்டி ஜூலை 28 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வரும் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அன்றைய நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறையையொட்டி ஜூலை 28 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The District Collector has ordered a local holiday declaration for Chengalpattu district on July 28th on the occasion of Aadipuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com