

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் 1926 ஆம் ஆண்டு முதல் வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொருள்காட்சி ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது. 20 நாள்கள் நடைபெறும் இந்த பொருள்காட்சி ஜூலை 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
வழக்கமாக ஆடி அமாவாசை அன்று இந்த பொருட்காட்சியில் அதிகளவிலான மக்கள் கூடுவார்கள் என்பதால், ஜூலை 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ஈடாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளா்களுடன் ஜூலை 24 ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.