திருவாரூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிா்பார்க்கப்படுகிறது.
புனிதநீர் ட்ரோன் மூலம் பக்தர்களின் மீது தெளிக்கப்படும்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜன. 28-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையானது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு பிப். 7 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.