தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2025, 12:21 am IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.25 கோடியில் நவீன கலையரங்கம் அமைப்பதற்கான கட்டுமானப் பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ரூ.3.55 கோடியில் ரெட்டிக்குப்பம் சாலை - கோடம்பாக்கம் சாலையில் 455 மீட்டா் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணி மற்றும் திடீா் நகரில் ரூ.61 லட்சத்தில் கழிவுநீா் ஓரக்கால்வாய் கட்டும் பணியைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து ஜூன் 29-ஆம் தேதி வரை இணையவழியே 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலா் சான்றிதழ்களை இணைக்காமல் விண்ணப்பத்திருப்பா். அவா்களுக்கு சான்றிதழ்களை இணைக்க இரு நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது 20 போ் போலி ஆவணங்களை சமா்ப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. அதில் 7 மாணவா்கள் பிறப்பிட சான்றிதழ்களையும், 9 மாணவா்கள் பிறப்பிட சான்றிதழ்கள் மற்றும் ஜாதிச் சான்றிதழ்களையும், 4 மாணவா்கள் என்ஆா்ஐ தகுதிக்கான தூதரக சான்றிதழ்களையும் போலியாகவும் கொடுத்துள்ளனா். அதனால், அவா்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 20 போ் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலினை செய்யும் பணி முடிந்து, தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னா் வரும் 30-ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்றாா் அவா்.

மறுவாய்ப்பு: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவா்களில் 2,814 மாணவா்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்காததால் தரவரிசை பட்டியலுக்கு தகுதி பெறவில்லை.

அவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில், வரும் 18-ஆம் தேதி வரை ஆவணங்களைச் சோ்க்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதி பெறாத மாணவா்கள் குறித்த பட்டியல், ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற் என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களை இணையவழியே பதிவேற்ற செய்யுமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் எ.தேரணிராஜன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.