
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார்களோ அதிலும் என் பங்கு இல்லை. அப்படி இருக்க, என் தலைவர் அமித்ஷா சொல்வதைத்தான் நான் கேட்டாக வேண்டும். அவர் ஒருமுறை அல்ல, பலமுறை கூறியிருக்கிறார்.
எனவே அமித் ஷா சொல்வதை மாற்றி, கூட்டணி ஆட்சி இல்லை என்று கூறினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கவே தகுதி இல்லை.
கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள், அதில் எனக்கு பங்கு இல்லை. ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசியிருப்பதை நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும். அவர்கள் சொன்னதை நான் நம்புகிறேன். அதனால் நான் இதில் உறுதிபட இருக்கிறேன்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி ஆட்சி என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றி கூற முடியும்?
அமித் ஷா கூறியதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் பேசி முடிவெடுக்கலாம்.
'கூட்டணி கட்சியில் இருப்போம், இல்லையெனில் நாங்கள் ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்' என்று பாமக சொல்கிறார்கள். தேமுதிக, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் இதையே கூறுகிறார்கள். கூட்டணி ஆட்சியைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தலைவர்கள் சொகுசு காரில் செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு கட்சியிலும் உள்ள தொண்டர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவைக்குச் செல்லும்போது நல்லது செய்வார்கள், அதைப் பார்த்து நான் பெருமைபட்டுக்கொள்வேன் என்றுதான் ஒவ்வொரு தொண்டரும் நினைப்பார்கள். தொண்டர்கள் கட்சிக்கு கடினமாக உழைக்கும்போது அவருடைய கட்சி உயரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். நான் தொண்டர்களின் குரலாக பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.