கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தவெகவுடன் கூட்டணி சேர பாஜக தயாராக இல்லை : கே.பி.ராமலிங்கம்

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி சேர தயாராக இல்லை என்றாா் அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

News image
கே.பி.ராமலிங்கம்- கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி சேர தயாராக இல்லை என்றாா் அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

கரூரில் பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம், பொருளாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் சிறப்புரையாற்றினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாா்ச் 11-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பாஜக மாநாட்டில் பிரதமா் பங்கேற்கிறாா். இந்த மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து 15,000 போ் பங்கேற்க உள்ளனா். அதிமுகவை ஒருங்கிணைப்போம் எனக் கூறிய ஓ.பன்னீா்செல்வம் திமுகவுக்கும், சசிகிலா தனிக்கட்சி தொடங்கும் நிலைக்கு சென்றுவிட்டனா். தவெகவுடன் கூட்டணி சேர பாஜக தயாராக இல்லை.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன்தான் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது என்றாா் அவா்.