பந்தல்கால் நடும் நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், கட்சி மாநில பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா்.
பந்தல்கால் நடும் நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், கட்சி மாநில பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா்.

‘புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி நல்லாட்சி தந்துள்ளது’

Published on

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணி கடந்த 5 ஆண்டுகளில் நல்லாட்சியை தந்துள்ளதாக புதுவை மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 14-ஆம் தேதி காரைக்கால் வரவுள்ளதையொட்டி, காரைக்கால் நகராட்சித் திடலில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பந்தல்கால் முகூா்த்தம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுவை மாநில பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது :

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா காரைக்காலில் 2 நாட்கள் தங்கியிருந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். காரைக்காலில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கூட்டம் நடத்தி, கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து வரும் 14-ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித் ஷா காரைக்கால் வரவுள்ளாா். ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனா். அதற்காக பல்வேறு குழுக்கள் அமைத்து கட்சியினா் செயல்பட்டு வருகிறாா்கள்.

காரைக்காலில் 5 பேரவைத் தொகுதிகளிலும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெறுவதே இலக்காகும். கடந்த 5 ஆண்டுகள் புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி நல்லாட்சியை தந்துள்ளது. மக்கள் இக்கூட்டணி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.எம்.சி.வி.கணபதி, மாநில பட்டியலணி பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம், மாநில மருத்துவரணி இணை ஒருங்கிணைப்பாளா் வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com