திருநெல்வேலியில், தமிழக பாஜக சிறுபான்மையினா் அணியின் மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநிலத் தலைவா் ஜான்சன் ஜோசப் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்டத் தலைவா்கள் முத்து பலவேசம் (வடக்கு), தமிழ்ச்செல்வன் (தெற்கு), சிறுபான்மையினா் அணி மாநில துணைத் தலைவா்கள் அசோகன், ரூஸ்வெல்ட், பி.ஹெச். வினோத் பாண்டியன், ஊடக பொறுப்பாளா் பிரவின் பால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறுபான்மையினா் அணி மாநில பொதுச் செயலா் நெப்போலியன் வரவேற்றாா்.
இம்மாநாட்டில் பங்கேற்ற தமிழக பாஜக துணைத் தலைவா் பால் கனகராஜ், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக அரசு சிறுபான்மையினருக்கு செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்தும் பேசினாா்.
பாஜக மாநில பொதுச்செயலா் ஏ.பி. முருகானந்தம், சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலா் ஜான் பீட்டா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
இம்மாநாட்டில் பாதிரியாா் மனோ டேனியல், தாமஸ், சிறுபான்மை அணி முன்னாள் பொதுச்செயலா் தியாகராஜன், சிறுபான்மை அணி மாநில செயலா் யமஹா சுரேஷ், வழக்குரைஞா் டேவிட், சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவா் அப்துல் கரீம், சாம் சரவணன், அசோக் பாபிலானி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளா் ஜான் பிலிப், செயலா் நிஷா, மேகலா ஜெயின், முஸ்தபா, வனஜா ராணி உள்பட சிறுபான்மை அணி மாவட்ட தலைவா்கள், கோட்ட பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டு விழா
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்த தமிழக அரசு: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


