
மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர்விட்டு அழுதார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(சனிக்கிழமை) காலமானார்.
மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க. முத்துவின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மு.க. அழகிரி, தனது மூத்த சகோதரர் மு.க. முத்துவுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லம் வந்தார். மு.க. முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத அவர் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் அருள்நிதி உள்ளிட்டோரும் மு.க. முத்துவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.