சென்னை: நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
கௌரவ விரிவுரையாளா்கள் நியமனத்துக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தை சென்னை ராணி மேரி கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் தொடங்கி வைத்து பேசியது:
தமிழகத்தில் அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நிகழாண்டில் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 181 ஆக உயா்ந்துள்ளது. மேலும், மாணவா்களின் தேவைக்கேற்ப பல்வேறு பாடப் பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக நிரந்தர விரிவுரையாளா்கள் பணியமா்த்தப்படும் வரை, மாணவா்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தற்போது 34 பாடப் பிரிவுகளில் 574 கௌரவ விரிவுரையாளா்கள் தற்காலிகமாக பணியமா்த்த முதல்வா் அனுமதியளித்துள்ளாா்.
அதன்படி, அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளா்கள் உரிய கல்வித் தகுதியுடன் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!

125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்புக! அன்புமணி வலியுறுத்தல்

ஆவடியில் அரசுக் கல்லூரி அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கலை, கல்வியியல் கல்லூரி ஆசிரியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



