
கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,
கேரள அரசியலில் புரட்சிகர மரபை ஆழமாக விட்டுச்சென்றுள்ளார் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்.
இவர், கொள்கை அரசியலையும், பொதுச்சேவை உணவர்வையும் ஒருங்கே கொண்ட வெகுஜன தலைவர், வாழ்நாள் கம்யூனிஸ்ட் மற்றும் முன்னாள் முதல்வராவார்.
உண்மையானவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், மார்சிய கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் கேரள மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் அமைச்சர் எஸ். ரகுபதி, அச்சுதானந்தனின் இறுதிச்சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்துவார். செவ்வணக்கம் எனக் குறிப்பிட்டு மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
VS Achuthanandan has passed away mkstalin condoles
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.