
முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை உள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனை சென்று முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதல்வரைச் சந்தித்த பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"முதல்வருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இன்று மாலைகூட அவர் வீடு திரும்பலாம்" என்று கூறினார்.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.