முதல்வருக்கு பரிசோதனை: வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு நடைபெறும் பரிசோதனை குறித்து...
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மருத்துவ பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அரசு அலுவல்கள், அரசியல் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஓய்வின்றி இயங்கிவரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது தலைசுற்றல் ஏற்பட்டது.

இதையடுத்து வீடு திரும்பிய அவர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றார். அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவதற்காக வந்த முன்னாள் எம்.பி. அன்வா் ராஜாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கிய பின்னர், கட்சி சாா்ந்த பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது முதல்வருக்கு மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அறிகுறிகளுக்கேற்ப அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, பல்நோக்கு மருத்துவக் குழுவினரும் முதல்வரின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், அடுத்த 3 நாள்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின், கார் மூலம் மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

Summary

Chief Minister Stalin has been taken to Apollo Hospital in Teynampet for medical tests.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com