
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் ச்ரந்த 4ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடிய நபர் என சந்தேகத்தின் அடிப்படையில், ஒருவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதாகத் தகவல்.
சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்தானா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் தனிப்படை போலீசாரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் பகுதியில் சேர்ந்த நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவியை வாயில் துணியை கட்டி கடத்திச் சென்று மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விவகாரத்தில் 3 டிஎஸ்பிக்கள், ஒன்பது தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ம் தேதி அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை, வடமாநில இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் சென்னையில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சென்னைக்கு விரைந்து வந்த தனிப்படை போலீசார், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபரை பிடிக்கும் பொழுது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து காலில் அடிபட்டு காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் உடைமைகளின் நிறம் குறித்து விசாரணையில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில இளைஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று காலை தொடங்கப்பட்ட விசாரணை முற்பகல் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த வழக்கில் 100 க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தியதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நபர் குற்றவாளி இல்லை என்று தெரிய வந்திருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.