பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திமுக ஆட்சியை வீழ்த்துவோம்: எடப்பாடி பழனிசாமி

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2025, 12:04 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்கி கோவை, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் 46 தொகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்தேன்.

அப்போது, மக்கள் திமுக ஆட்சியில் தாங்கள் சந்தித்துவரும் வேதனைகளை என்னிடம் எடுத்துரைத்தனா். திமுகவின் ஏமாற்றுத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

முதல்வா் ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதல்வராக்கியது தவிர வேற எந்த சாதனையையும் செய்யவில்லை.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் 45 நாள்களுக்குள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 525 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் என பெண்கள் மனு அளித்து வருகின்றனா். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை.

திமுக கூறிய 525 தோ்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைத்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது.

திமுக ஆட்சியில் சாமானியா்கள் வீடே கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல், ஜல்லி, கம்பி என எல்லாம் விலையேறிவிட்டது. தனிநபா் வருமானத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது அதிமுக ஆட்சியின் தொடா்ச்சியே தவிர, திமுக அரசின் சாதனையல்ல.

திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திமுகவை நிச்சயம் வீழ்த்துவோம் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.