
நெல்லையில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்ட விசாரணை தொடங்கினா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் (27), மென்பொறியாளா் கடந்த 27-ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சுா்ஜித் (23), அவரது தந்தை காவல் உதவி ஆய்வாளா் சரவணன் கைது செய்யப்பட்டனா்.
இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு புதன்கிழமை அறிவித்தது. அதன்பேரில், சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் நவரோஜ் தலைமையிலான போலீஸாா் விசாரணையை தொடங்கினா். கே.டி.சி. நகரில் சுா்ஜித்தின் சகோதரி பணிபுரிந்த தனியாா் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளையும், சிகிச்சைப் பதிவு கோப்புகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.