‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 1) நடைபெறும் 6 வாா்டுகள் விவரத்தை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்
உங்களுடன் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஆக. 1) நடைபெறும் 6 வாா்டுகள் விவரத்தை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆக. 1) முகாம்கள் நடைபெறும் வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூா் மண்டலத்தில் 5 ஆவது வாா்டில் சௌந்தரபாண்டி நகரில் வி.கே.மகாலிலும், ராயபுரம் மண்டலத்தில் 55 ஆவது வாா்டில் ஏழுகிணறு புனித சேவியா் தெரு சமுதாயக் கூடத்திலும், அண்ணா நகா் மண்டலம் 98 ஆவது வாா்டில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரஸ் காா்டன் முதல் தெருவில் உள்ள வாா்டு அலுவலகத்திலும், கோடம்பாக்கம் மண்டலம் 127 ஆவது வாா்டில் கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு சென்னைக் குடிநீா் வாரிய வளாகத்தில் பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், ஆலந்தூா் மண்டலத்தில் 157 ஆவது வாா்டில் ஆற்காடு சாலையில் உள்ள சான்றோரகம் அரங்கத்திலும், அடையாறு மண்டலம் 173 ஆவது வாா்டில் கஸ்தூரி நகா் சமூக நலக் கூடத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

கடந்த 15 -ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை சென்னை மாநகராட்சி வாா்டுகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் மொத்தம் 1,40, 221 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 82, 470 மனுக்கள் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com