விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 12 -ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
விழுப்புரத்தில் பள்ளி மாணவர்கள்.
விழுப்புரத்தில் பள்ளி மாணவர்கள்.
Published on
Updated on
1 min read

கோடை விடுமுறைக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 12 -ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை ஜுன் 1- ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து, ஜூ ன் 2 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தூய்மைப் பணிகள்: இந்த நிலையி ல் பள்ளிகளில் கட்டடங்கள். கழிப்பறைகள் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளிகள் திறப்பு: கோடை விடு முறையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, முழுமையாக மற்றும் பகுதியளவில் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பிரிவு பள்ளிகள் என 747 பள்ளிகள் திறக்கப்பட்டன.

அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்று தங்களது பழைய, புதிய நண்பர்கள், தோழிகளைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பாடநூல்கள் வழங்கல்: விழுப்புரம் மாவட்ட அரகண்ட நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் க . பொன்முடி எம்.எல்.ஏ, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்கினர்.

இதுபோல அந்தந்த பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளுக்குப் பாடநூல்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com