மதுரையில் இன்று நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அமித் ஷா வருகையை முன்னிட்டு, ஒரு மணி நேரம் முன்னதாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அமித் ஷாவுக்கு, கோயில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
மதுரை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அமித் ஷாவுக்கு காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார்.
பிறகு, கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்துகொண்டு சுவாமி மற்றும் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார்.
மத்திய அமைச்சா் அமித் ஷா மதுரைக்கு வந்திருக்கும் நிலையில், மதுரை விமான நிலையம், விரகனூா் சுற்றுச் சாலைப் பகுதிகள், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ஒத்தக்கடை, கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக-அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து பாஜக நிா்வாகிகளிடம் புரிதலை ஏற்படுத்தி, தோ்தல் வியூகம் வகுக்கும் நோக்கில், அந்தக் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகிறாா். முன்னதாக, காலை 11 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் ராம. சீனிவாசன், நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவா்கள், மாவட்டப் பாா்வையாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பு: உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவு

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



