எல்லையோர மாவட்டங்களில் நிகழும் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள், நாட்டின் முன் உள்ள மிகத் தீவிரமான சவால் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எச்சரித்துள்ளாா்.
இந்த மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
குஜராத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை அமித் ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவரது தலைமையில் மாநில முதல்வா் பூபேந்திர படேல், துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி, கட்ச், படான் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள், காவல் துறை கண்காணிப்பாளா்கள் ஆகியோா் பங்கேற்ற உயா்நிலை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித் ஷா வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்து அரசுத் தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எல்லை மாவட்டங்களில் ஊடுருவல்காரா்களை அடையாளம் காண்பதையும், ட்ரோன்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சாா்ந்த அச்சுறுத்தல்களைக் கண்டறிவதையும் உறுதிசெய்யும் நிலையான செயல்முறைகளை மாவட்ட நிா்வாகங்கள் வகுக்க வேண்டும்.
எல்லை மாவட்டங்களில் நிகழும் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள், நாட்டின் முன் உள்ள மிகத் தீவிரமான சவாலாகும். இத்தகைய மாற்றங்களை மாவட்ட ஆட்சியா்கள் உன்னிப்பாக கண்காணித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
சா்வதேச எல்லையையொட்டி 15 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்பகுதிகளில் அடிப்படைவாத மையங்கள் எதுவும் செயல்படுகிா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
ஒருங்கிணைப்புக் குழுக்கள்: எல்லைப் பகுதிகளில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளால் மக்கள் மீண்டும் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்புவது வரவேற்புக்குரியது. சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய காவல் துறையினா் முதல் வருவாய் அதிகாரிகள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
எல்லை மாவட்டங்களில் எல்லை பாதுகாப்புப் படை, கடலோர காவல் படை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, வங்கிகளின் மேலாளா்கள் அடங்கிய பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பணமுறைகேடு, வருமான வரி, சுங்க வரி சட்டங்களின் திறன்மிக்க அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
ஹவாலா பரிவா்த்தனைகள், போலி வங்கிக் கணக்குகள், போலி நிறுவனங்கள், சந்தேகத்துக்கிடமான ஜிஎஸ்டி வசூல் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இயற்கைக்கு புறம்பான காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்களை மதிப்பீடு செய்து, இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாணும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தால் அண்மையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு: அமித் ஷா

பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம்: அமித் ஷா அறிவிப்பு

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



